கெனிஷா எங்கேயும் போகல பாஸ்!.. மலையாள திரையுலகில் மாஸ் காட்ட வராரு!..
இண்டி இசையுலகில் தனது தனித்துவமான குரல் மற்றும் இசை பாணியால் கவனம் ஈர்த்துள்ள பாடகி கெனீஷா பிரான்சிஸ், தற்போது மலையாள திரையுலகில் புதிய பயணத்தை தொடங்கவுள்ளார். ஜிதின் ஐசக் தாமஸ் இயக்கத்தில் உருவாகும் ’மட் பிஷ்’ (Mud Fish) திரைப்படத்தின் மூலம் அவர் மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார்.
நடிகர் சன்னி வெய்ன் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படம், மண்ணின் மணம் கமழும் கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. அதன் தனித்துவமான கதை மற்றும் திரைக்கதையால் ஏற்கனவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனித்துவமான இசை, உலகளாவிய மேடை நிகழ்ச்சிகள் மற்றும் மனதைத் தொடும் பாடல்களின் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ள கெனீஷா, பல்வேறு மொழிகள் மற்றும் இசை வடிவங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வரிசையில் மலையாள திரையுலகில் அவரது அறிமுகம் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
‘மட் பிஷ்’ திரைப்படத்தில் இசை முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. இதில் கெனீஷாவின் பங்களிப்பு படத்தின் உணர்ச்சிகரமான அம்சங்களுக்கு கூடுதல் வலுசேர்க்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ரவி மோகன் சர்சையிலிருந்து மீண்டு மற்றோரு வழக்கில் சிக்கி, புதிய கலை வாய்ப்புகளை தொடர்ந்து தேடி வரும் கெனீஷாவின் இந்த மலையாள திரையுலக பயணம், அவரது இசைப் பயணத்தில் மற்றொரு முக்கியமான அத்தியாயமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
