×

தொடரும் திரைதுறை மரணங்கள்... நீரில் மூழ்கி நடிகர் திடீர் மரணம்!

ஐயப்பனும் கோஷியும்' உட்பட ஏராளமான படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் அனில் நெடுமங்காடு, மலங்கரா அணையில் குளிக்கும்போது நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்தார். 

 

ஏற்கெனவே 'ஐயப்பனும் கோஷியும்' திரைப்படத்திஜின் இயக்குநர் கே.ஆர். சச்சிதானந்தன் காலமான நிலையில், இப்போது அப்படத்தில் நடித்த மற்றொரு நடிகரும் உயிரிழந்திருக்கிறார்.

ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் 'பீஸ்' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் அனில் நெடுமங்காடு நடித்து வர, அதன் படப்பிடிப்பு தொடுபுழாவில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு முடிந்து மாலை மலங்கரா அணைக்கு உடனிருந்தவர்களுடன் அனில் குளிக்க சென்றுள்ளார். 

அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய அனிலை நண்பர்கள் மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால் அனில் நெடுமங்காடு இந்த விபத்தில் உயிரிழந்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News