சம்பளத்தில் கெத்து காட்டும் தினேஷ்.. 200 கோடியே கொடுக்கும் போது இவர் கேக்குற கோடிய கொடுக்கலாமே

by Rohini |
gethu dinesh
X

சம்பளத்தில் கெடுபிடி: சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அந்த படத்தில் நடித்த நடிகர்களோ நடிகைகளோ தன்னுடைய அடுத்த படத்திலிருந்து சம்பளத்தை அதிகரித்து விடுவார்கள். இது காலங்காலமாக நடக்கும் ஒரு வழக்கமாகவே இருக்கிறது. அதுவும் ஏற்கனவே 100 கோடி 150 கோடி என சம்பளம் வாங்கும் நடிகர்களும் தன்னுடைய ஒரு படம் வெற்றி அடைந்து விட்டால் அடுத்த படத்தில் அதை 200 கோடியாகவோ 250 கோடியாகவோ அதிகரித்து விடுகிறார்கள்.

பிசினஸ் மைண்ட்: இப்படி ஒரு சம்பளத்தை கொடுக்கவும் தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவை தன்னுடைய படத்தை பெரிய அளவில் பிசினஸ் செய்ய வேண்டும் என்பதுதான். அதைப்போல அந்த நடிகர்களை வைத்து மார்க்கெட்டை அதிகரிக்கச் செய்யவும் இந்த மாதிரி அவர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுத்து விடுகிறார்கள். இதனால் தான் தமிழ் சினிமா இன்னும் அதே நிலைமையில் இருக்கின்றது.

மலையாள சினிமா: ஆனால் மலையாள சினிமாவை பொறுத்த வரைக்கும் மோகன்லால், மம்மூட்டி உட்பட மாஸ் ஹீரோக்களே இன்னும் சம்பளத்தை நம் தமிழ் நடிகர்களைப் போல வாங்கவில்லை. முதலில் படம் வெற்றியாகட்டும். ஒருவேளை படம் வெற்றியடைந்தால் அதில் வரும் ஷேரில் பங்கிட்டு கொள்ளலாம் என்ற விதிமுறையின் படி தான் அவர்கள் சம்பளமே நிர்ணயிக்கப்படுகிறது. இப்படி ஒரு சூழல்தான் தமிழ் சினிமாவில் வரவேண்டும் என பல தயாரிப்பாளர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான லப்பர் பந்து திரைப்படம் எந்த அளவு ஒரு வெற்றியை பெற்றது என அனைவருக்கும் தெரியும்.

லப்பர் பந்து: சின்ன பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட அந்த படம் எதிர்பார்க்காத வெற்றியையும் வசூலையும் பெற்றது. அதற்கு காரணம் அதனுடைய கதைகளம். குறிப்பாக அந்த படத்தில் நடித்த தினேஷ் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான தினேஷ் அட்டகத்தி தினேஷ் என்று அழைக்கப்பட்டார். ஆனால் லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்ததில் இருந்து கெத்து தினேஷ் என அழைக்கப்பட்டார்.


இந்த படத்தின் ஹீரோ ஹரிஷ் கல்யாண் என்றாலும் தினேஷின் நடிப்பை தான் அனைவரும் பாராட்டினார்கள். விரும்பினார்கள் .ஹரிஷ் கல்யாணுக்கு மாமனாராக இந்த படத்தில் நடித்திருந்தார் தினேஷ். இப்படி ஒரு கதாபாத்திரத்தை இவ்வளவு சிறு வயதில் அதுவும் இப்பொழுது இருக்கிற சூழ்நிலையில் எந்த ஒரு நடிகரும் ஏற்று நடிக்க மாட்டார்கள். ஆனால் தைரியமாக நடித்தார் தினேஷ்.

அதில் வெற்றியும் கண்டார். படமும் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தினேஷுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் தன்னுடைய சம்பளத்தை அதிகரித்திருக்கிறாராம் தினேஷ். ஒரு கோடியாக இருந்த சம்பளத்தை 8 கோடி என்று அளவில் உயர்த்தி இருக்கிறாராம். இது மற்ற நடிகர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது குறைந்த அளவு சம்பளம் தான். இருந்தாலும் தினேஷுக்கு அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்கலாம் என்பதுதான் ரசிகர்களின் கருத்தாகவும் இருக்கின்றது.

Next Story