கடந்த மாதம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி பலத்த வரவேற்பை பெற்ற திரைப்படம் கே.ஜி.எப் 2. இந்த திரைப்படம் இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்களை அள்ளி கொண்டு சென்றுவிட்டது. அந்த படத்தின் தாக்கம் இன்னும் தமிழ் திரையரங்குகளில் இருந்து கொண்டு தான் இருக்கிது.
இந்த படத்தினை பார்த்த ரசிகர்களுக்கு அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என எதிர்பார்க்க வைத்துள்ளது. கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸை நாயகனாக வைத்து சலார் எனும் படத்தினை இயக்கி வருகிறார்.
இன்னும் முக்கால்வாசி ஷூட்டிங் பாதி இருக்கிறதாம். அதனை இந்த வருட இறுதிக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அந்த படத்தை முடித்துவிட்டு, இயக்குனர் பிரசாந்த் நீல், கே.ஜி.எப் 3 பட வேலைகளை ஆரம்பிக்க உள்ளாராம். கே.ஜி.எப் அடுத்தடுத்த பாகங்களை ஹாலிவுட் சினிமாவில் இருக்கும் மார்வெல் உலகம் போல ஆரம்பிக்க உள்ளனராம்.
இதையும் படியுங்களேன் – அந்த நடிகர் ஓகே சொல்லிருந்தா தனுஷ் சினிமாவுக்கு வந்திருக்கவே மாட்டார்.! வெளியான பகீர் ரகசியம்.!
கே.ஜி.எப் 3 படத்திற்கான இந்த வருட இறுதிக்குள் முதற்கட்ட பணிகளை ஆரம்பித்து விடுவார்களாம். 2023 இல் கே.ஜி.எப் 3 பட ஷூட்டிங்கை ஆரம்பிக்க படக்குழு தீர்மானித்துள்ளதாம். அப்படி ஆரம்பித்தால் 2024இல் தான் பட ரிலீஸ் இருக்குமாம். சலார் படம் 2023 தொடக்கத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…
TVK VIJAY…
Dhanush: இட்லி…