நிழல்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நிழல்கள் ரவி. இவர் படத்தில் நடிக்கும் முன்னாடியே பாரதிராஜா இயக்கும் படத்தில் டப்பிங் பேசினாராம். முதல் படத்தில் நடித்ததும் பட வாய்ப்புகள் வராத நிலையில் கொஞ்ச நாள் படங்களின்றி வாய்ப்புகளை தேடி அழைந்தாராம்.
பின் நிழல்கள் ரவியின் அண்ணன் அவரை எந்த கேரக்டர் வேணுனாலும் விட்டு விடாதே கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள் என்று சொன்னாராம். அவர் பேச்சை தட்டாமல் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு நடித்துள்ளார். அதில் வெற்றியும் கண்டார். நிறைய வெற்றிப் படங்களை கொடுத்தார்.
அதுமட்டுமில்லாமல் டப்பிங்கிலும் அசத்தி வருகிறார். அண்மையில் வெளியான கே.ஜி.எஃப் படத்திலும் டப்பிங் பேசி அசத்தினார். இவர் பேசிய வசனத்திற்கு திரையரங்கில் கைத்தட்டல்கள் குவிந்தன. 1980கள்லேயே ‘மெட்டாலிக் வாய்ஸ்’னு சொல்லியிருக்காங்களாம்.
அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கே.ஜி.எஃப் படம் பற்றி பேசினார். அப்போது ‘கே.ஜி.எஃப்’ டப்பிங் பேசுறப்பவே இந்தப் படம் பெரிய வெற்றிபெறும்னு சொன்னேன். வசூலை சாக்குப்பையிலதான் அள்ளப்போறாங்கன்னு சொன்னேன். அது நடந்திருக்கு.” என்று கூறினார். இது ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் இதே மாதிரி எல்லா படங்களுக்கும் சொல்லுங்கள் வெற்றி பெறட்டும் என்று கலாய்த்தனர்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…