கொரோனாவிற்கு பயந்து ஹோட்டலில் தங்கியிருக்கும் கே.ஜி.எஃப் நடிகர்
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கே.ஜி.எஃப். படம் இந்தியா முழுவதும் பெரிய அளவில் ரீச்சானது. இந்நிலையில் கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்கள்.
Sat, 26 Dec 2020

கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வந்தது. யஷ், சஞ்சய் தத் தொடர்பான காட்சிகளை படமாக்கியுள்ளார் பிரசாந்த். படப்பிடிப்பு முடிந்து யஷ் பெங்களூருவுக்கு திரும்பியுள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு செல்லாமல் 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கிறார்.
வீட்டில் மனைவி 2 வயது மகள் அய்ரா, ஒரு வயது மகன் யதர்வ் ஆகியோர் இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஹைதராபத்தில் இருந்து நேராக வீட்டிற்கு செல்லாமல் ஹோட்டலில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் யஷ். மனைவி, பிள்ளைகளின் நலன் கருதி தான் யஷ் இப்படி செய்துள்ளார்.