Categories: Cinema News latest news

ராக்கி பாய் கடித்து குதறி வைத்த தமிழ் படங்கள் பற்றி தெரியுமா.!? மொத்த லிஸ்ட் இதோ…

கே.ஜி.எப் எனும் ஒரு திரைப்படம் வரவில்லை என்றால் யாஷ் என்கிற நடிகர் கன்னட சினிமாவில் இருக்கிறார் என்பதே நமக்கு தெரிந்திருக்காது. ஏன் கன்னட சினிமா என்று ஒன்று இருப்பதே பலருக்கு தெரிந்திருக்காது. ஏனென்றால், கர்நாடகாவில் கூட, தெலுங்கு சினிமா ரசிகர்கள் தான் அதிகம். அவர்கள் படம் தான் கன்னட சினிமாவை தாண்டி வெளியாகும் வசூல் குவிக்கும்.

கே.ஜி.எப் என்கிற படம் தான் கன்னட சினிமாவையும்  ‘ராக்கி பாய்’ யாஷ் என்கிற நடிகரையும் வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அதற்கு பிறகு தான் கே.ஜி.எப் நடிகர் இதற்கு முன்னர் எந்தெந்த படங்களில் நடித்துள்ளார் என லிஸ்ட் போட்டு தேட ஆரம்பித்து விட்டனர்.

இதையும் படியுங்களேன் – ஆட்சிக்கு வந்தவுடன் ஜொலிஜொலிக்குது கலைஞர் டிவி.! என்னென்ன படங்கள் வரப்போகுது தெரியுமா.?!

 

அதில் தமிழ் ரசிகர்களுக்கு ஷாக்கிங் ரிப்போர்ட் கிடைத்துள்ளது. தமிழில் சூப்பர் ஹிட்டான சில படங்களை கன்னடாவில் யாஷ் ரீமேக் செய்துள்ளார். முதலில் விமல், ஓவியா நடித்து சூப்பர் ஹிட்டான களவாணி திரைப்படத்தை கிரட்டாக (kirataka) எனும் பெயரில் ரீமேக் செய்துள்ளர்.

அதே போல சசிகுமார் நடிப்பில் உருவாகி வெற்றியடைந்த சுந்தரபாண்டியன் திரைப்படத்தை ராஜா ஹுலி (raja huli) எனும் பெயரிலும், சிம்பு நடிப்பில் வரவேற்பை பெற்ற வாலு திரைப்படத்தை சந்து ஸ்ட்ரெயிட் பார்வேர்ட்  எனும் பெயரிலும் நம்ம யாஷ் ரீமேக் செய்துள்ளார்.

Manikandan
Published by
Manikandan