×

கேஜிஎப் 2 ரிலிஸ் எப்போது… ரஜினி ரசிகர்களை கடுப்பேற்றிய அறிவிப்பு!

இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் கேஜிஎஃப் 2 ஆம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

 

இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் கேஜிஎஃப் 2 ஆம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

கன்னட சினிமாவில் உருவான பேன் இந்தியா படமாக சில வருடங்களுக்கு முன்னர் கே ஜி எப் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனாலும் அதன் பின்னர் ஓடிடி பிளாட்பார்ம்களில் ரிலீஸான போது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் திரைப்படம் இப்போது உருவாகி வருகிறது. இன்னும் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் நிலையில் உள்ளது. இதையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்ததும் படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில்தான் ரஜினியின் அண்ணாத்த திரைப்படமும் வெளிவர உள்ளது. இந்நிலையில் இரண்டு மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஒரே நேரத்தில் ரிலிஸ் ஆவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விஸ்வாசம் படத்தோடு மோதி ரஜினியின் பேட்ட திரைப்படம் வசூல் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News