×

சுந்தர் சி.க்கு கொரோனா - குஷ்பு டிவிட்டரில் உருக்கம்

 
சுந்தர் சி.க்கு கொரோனா - குஷ்பு டிவிட்டரில் உருக்கம்

தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதாவது 4 மாதங்களுக்கு முன்பு இருந்த நிலைக்கு தமிழகம் திரும்பியுள்ளது. இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து தற்போது 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா தொற்றுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சினிமா இயக்குனரும், நடிகையும், பாஜக வேட்பாளருமான குஷ்புவின் கணவருமான சுந்தர் சி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளர். இதை டிவிட்டரில் தெரிவித்துள்ள குஷ்பு ‘என் கணவர் சுந்தர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சி பெற்று வருகிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டிக்கொள்ளுங்கள்’ என பீலீங் காட்டியுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News