
Cinema News
போன இடத்தில் விஜயகாந்தை அசிங்கப்படுத்திட்டாங்க… ஆத்திரத்தில் குஷ்பு செய்த காரியம்..
தமிழ்நாடு போற்றும் மாபெரும் தலைவர்களில் ஒருவர் விஜயகாந்த். திரைத் துறையில் ரஜினி, கமல் என இருபெறும் ஆளுமைகளுக்கு நடுவில் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்து சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தார். தமிழ்நாட்டுக்கே உரிய கருப்பு நிறம், கணீர் குரல் என கம்பீரமான தோற்றத்துடன் தென்னக மக்களின் சூப்பர் ஸ்டாராக திரையில் கலக்கினார். பின்னர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தார்.
ஹிட் நடிகராக உயர்ந்தால் அவர்களுக்கு தமிழ் மட்டுமின்றி மற்ற மொழி திரைப்படங்களின் வாய்ப்பு வரும். அப்படி விஜயகாந்த் உச்சத்தில் இருக்கும்போது அவரை தேடி வந்த வேற்று மொழி படங்களை எல்லாம் தவிர்த்தார். தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் நடித்திராத சில நடிகர்களில் விஜயகாந்த்தும் ஒருவர். விஜயகாந்த் போல உதவி செய்யும் நபர் திரையுலகத்தில் வேறு யாரும் கிடையாது. உதவி என்று தேடி வந்தவருக்கும் உதவுவார். உதவி தேவைப்படுவோருக்கும் ஓடி சென்று உதவ கூடியவர்.
அதனாலயே இவருக்கு மக்களின் ஆதரவு கிடைத்தது. அதன் காரணமாக அரசியல் கட்சி ஆரம்பித்து மக்களுக்கு சேவை செய்ய நினைத்தார். அடுத்த எம்ஜிஆர் போல வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடல் நலக்குறைவால் துவண்டு போனார். பின்னர் 2023 ஆம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார் விஜயகாந்த். அவரின் இறுதி சடங்கில் பங்கேற்ற ரஜினிகாந்த்,” விஜயகாந்த் போல ஒரு நல்ல மனிதர் பார்க்கவே முடியாது என்றும், அவர் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆகாதது தமிழ்நாடு மக்களுக்கு கிடைத்த சாபம்” என்றும் கூறியிருந்தார்.

விஜயகாந்த் பற்றி தற்போது ஒவ்வொரு நடிகர்களும் தங்களின் பங்கிற்கு ஏதாவது ஒன்றை சொல்லி வருகின்றனர். அந்த வகையில் நடிகை குஷ்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவத்தை பகிர்ந்து உள்ளார் அதில்,” நானும் விஜயகாந்த் சாரும் ஷூட்டிங் போனோம். அங்க முழுவதும் ஹிந்திகாரங்க இருந்தாங்க. விஜயகாந்த் உட்கார ஒரு சேர் கூட போடல, எனக்கு கோபம் தாங்கல, நான் அவர்களை திட்ட போயிட்டேன், விஜயகாந்த் வேண்டாம்னு சொல்லிட்டாரு நம்மள நம்பி 2000 குடும்பங்கள் உள்ளது, கொஞ்சம் பொறுமையா இருங்கன்னு சொல்லிட்டாரு. விஜயகாந்த் போல் ஒரு உத்தமமான மனிதனை பார்க்க முடியாது” என்று சொல்லி இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயின்களுக்கு பாதுகாப்பாக இருப்பது விஜயகாந்த் சார் மட்டும்தான். மற்ற ஹீரோக்கள் ஏன் இந்த பிரச்சனை என்று ஒதுங்கும் போது விஜயகாந்த் முன் நின்று அந்த பிரச்சனைகளை சமாளிப்பார். இன்று விஜயகாந்த் இல்லாமல் போனது திரை உலகத்திற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய இழப்புதான்.