×

திடீரென பாஜகவில் சேர்ந்த குஷ்பு – காரணம் சுந்தர் சி யா?

நடிகை குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதற்கான பின்னணி காரணம் குறித்து பல தகவல்கள் சொல்லப்படுகின்றன.

 

நடிகை குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதற்கான பின்னணி காரணம் குறித்து பல தகவல்கள் சொல்லப்படுகின்றன.

நடிகையும் கடவுள் நம்பிக்கை அற்றவருமான நடிகை குஷ்பு திமுகவில் இருந்து விலகியதில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அங்கே அவருக்கு கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் பாஜகவை பாராட்டி பேசி வந்தது பலருக்கும் அவர் பாஜகவில் சேரப் போகிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. இந்நிலையில் நேற்று அதை உறுதிப் படுத்தும் விதமாக பாஜகவில் சேர்ந்தார். போன வாரம் வரை பாஜகவை விமர்சித்து வந்த குஷ்பு இப்போது அந்த கட்சியில் சேர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதற்குக் காரணம் அவரின் கணவர் சுந்தர் சி தான் என சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை சுந்தர் சி மறுத்துள்ளாராம். இதுகுறித்து பேசியுள்ள அவர் ‘எனக்கும் அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அது என் ஏரியாவே இல்ல’ என்று கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News