×

குஷ்புவே பாராட்டிட்டாங்க! - நன்றி சொன்ன அமைச்சர் விஜயபாஸ்கர்
 

கொரோனா விவகாரத்தில் சிறப்பாக செயல்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை குஷ்பு பாராட்டியுள்ளார்.
 

சீனாவில் உருவான கொரொனா வைரஸ் இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் பரவி விட்டது. இந்தியாவில் 200 பேருக்கு மேல் கொரொனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 பேர் உயிரிழந்து விட்டனர். இந்த வைரஸ் தமிழகத்திலும் மெல்ல மெல்ல பரவி வருகிறது.

இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மருத்துமனைகளுக்கு சென்று மருத்துவர்களிடம் பேசுகிறார். நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை கேட்டறிந்து வருகிறார். செய்தியாளர்களை சந்தித்து தகவல்களை கூறி வருகிறார். மக்கள் என்ன செய்ய வேண்டும் என அறிவுரைகளை தொடர்ந்து கூறி வருகிறார்.

இதைத்தொடர்ந்து அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் அவரை பாராட்டியிருந்தனர்,.

இந்நிலையில், நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் ‘திரைத்துறை மற்றும் சின்னத்திரை நடிகர்களுக்கு கொரொனா பாதிப்பு வரமால் தடுக்க ஆக்கப்புர்வமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் விஜயபாஸ்கர் எடுத்துள்ளார். அவருக்கு பெரிய நன்றி’ என பாராட்டியுள்ளார்

இதற்கு விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News