என்னை பத்தி தேவையில்லாம வதந்தி வருது!.. குஷ்புவின் மகள் என்ன இப்படி பட்டாசா வெடிக்கிறாங்க!..

 
anandita

அம்மா குஷ்பு, அப்பா சுந்தர். சியை தொடர்ந்து சினிமாவில் கால் பதித்துள்ளார் அனந்திதா சுந்தர். அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான ‘டபுள் ஆக்குபன்சி’ படத்தில் தான் தயாரிப்பாளராக களமிறங்குகிறார். விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர் படக்குழுவினர்.

ரொமான்டிக் ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்தில் சந்தோஷ், சம்யுக்தா விஸ்வநாத், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷன், விடிவி கணேஷ் மற்றும் பகவதி பெருமாள் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை அன்வி மூவிஸ் மற்றும் பென்ஸ் மிடியா இணைந்து தயாரித்து வருகின்றன. இசையமைப்பாளராக சாம் சி.எஸ் பணியாற்றியுள்ள நிலையில், ஒளிப்பதிவை சந்தகுமார் சக்கரவர்த்தி மேற்கொண்டுள்ளார்.

காதல், கற்பனை மற்றும் அடையாளம் போன்றவற்றை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், அறிவியல் மற்றும் நம்பிக்கை இடையேயான மோதலை புதிய கோணத்தில் வெளிப்படுத்தும் என படக்குழு தெரிவித்துள்ளது. ஒரே நபரை இரண்டு வெவ்வேறு வடிவங்களில் நேசிப்பதில் உருவாகும் உணர்வுகளும் கதையின் முக்கிய அம்சமாக இடம்பெறுகின்றன.

இந்நிலையில் சமிபத்தில் பேட்டி அளித்த படக்குழுவினர்கள், அதில் அனந்திதா சுந்தர்  “நான் பல பெரிய ஹீரோக்களுடன் படம் செய்து அதை வெளியிடாமல் வைத்திருக்கிறேன் என்று வதந்திகள் வருகின்றன. அப்படி எந்த படமும் என்னிடம் இல்லை. படம் எடுப்பது நான் மட்டும் பார்ப்பதற்கா, பின்னர் யாருக்கும் படம் செய்து தரமாட்டேன் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை வாங்க எல்லாருக்கும் படம் பண்றேன்,” என கலகலப்பாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் வழக்கமான கதையம்சங்களைத் தாண்டி புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், பின்னணி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

குஷ்புவின் இன்னொரு மகளான அவந்திகா சுந்தர் விரைவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார். அனந்திதா சுந்தர் மணிரத்னம் உதவி இயக்குநராக தக் லைஃப் படத்தில் பணியாற்றி இருந்தார். தற்போது குஷ்புவின் ஆவ்னி மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தை கவனிக்கத் தொடங்கியுள்ளார்.

Tags

From Around the web