குஷ்பு மகள் திடீரென ஆம்பளையா மாறிட்டாரே!.. என்ன கொடுமை சரவணா இது!..
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ள திரைப்படம் ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படம்.
இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் கற்பனை மற்றும் காதல் அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள புதுமையான படைப்பாகும். வழக்கமான காதல் கதைகளிலிருந்து மாறுபட்டு, பகலில் ஆணாகவும் இரவில் பெண்ணாகவும் மாறும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு படம் நகர்கிறது.
இந்த விசித்திரமான மாற்றத்தால் அவரது வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்கள், எதிர்பாராத சம்பவங்கள், நகைச்சுவை தருணங்கள் மற்றும் காதல் உணர்வுகள் என வித்தியாசமான திரைக்கதையுடன் படம் உருவாகியுள்ளது. இந்த சவாலான சூழ்நிலையிலிருந்து கதாநாயகன் எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதே படத்தின் மையக்கருவாக கூறப்படுகிறது.
படத்தில் சந்தோஷ், வினோத் கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், ரேஷ்மா வெங்கடேஷ், வி.டி.வி. கணேஷ் மற்றும் பகவதி பெருமாள் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு சுந்தரின் அவ்னி மூவீஸ் நிறுவனமும், பென்ஸ் மீடியாவும் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளன. குறிப்பாக, குஷ்புவின் மகள் தயாரிப்பு பணிகளில் முக்கிய பங்காற்றியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது மகளின் தயாரிப்பில் உருவாகும் படத்திற்காக நடிகை குஷ்பு நேரடியாக ப்ரோமோ வீடியோவில் தோன்றி நடித்திருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதனால் அந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
வித்தியாசமான கதைக்களம், குஷ்புவின் ஆதரவு ஆகிய காரணங்களால் ‘டபுள் ஆக்யுபன்சி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் வரும் ஜூன் 12, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
