ஆம்பள அப்படி நடிக்கலாம்.. பொம்பள நடிச்சா தப்பா?!.. டாக்சிக் சர்ச்சை பற்றி வாய் திறந்த கியாரா!...
பாலிவுட்டில் லஸ்ட் ஸ்டோரி படத்தில் சுய இன்பம் அணுபவிக்கும் பெண்ணாக துணிச்சலாக நடித்து அசத்தியவர் கியாரா அத்வானி.. ஹிந்தி மட்டுமில்லாமல் நிறைய தெலுங்கு படங்களிலும் கியாரா அத்வானி நடித்துள்ளார். கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் கேஜிஎப் பட நடிகர் யஷ் கதாநாயகனாக நடித்து உருவான டாக்ஸிக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கியாரா நடித்திருந்தார்.
இந்த படத்தில் கியாரா படுக்கையறை காட்சிகளிலும் துணிச்சலாக நடித்திருந்தார். அது தொடர்பான காட்சிகள் ட்ரைலர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோக்களில் இடம்பெற்று ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்படி வெளியான டாக்ஸிக் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை கவரவில்லை. எனவே, படம் தோல்வியடைந்தது.

இந்நிலையில், டாக்ஸிக் தோல்வி பற்றி மனம் திறந்து உள்ள கியாரா அத்வானி ‘முதல் நாளில் மிகவும் வேதனையாக இருந்தது.. படம் எதிர்பார்த்தபடி அமையாததால் மிகவும் மனமுடைந்தேன்.. அதேநேரம் வழக்கமான பாணியிலிருந்து விலகி சவாலான கதாபாத்திரத்தில் நடித்திருந்ததாக பலரும் பாராட்டினார்கள்.
டாக்ஸிக் படத்தில் படுக்கை அறை காட்சிகளில் நான் நடித்ததை பலரும் மோசமாக விமர்சனம் செய்தார்கள். ஒரு ஆண் பல பெண்களுடன் காதல் காட்சிகளில் நடித்தால் யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால் ஒரு பெண் அப்படி நடித்தால் ‘அவர் திருமணம் ஆனவர் அல்லவா! அவரின் கணவர் சித்தார்த் எனன நினைப்பார்?’ என கேட்கிறார்கள். இது பாலின பாகுபாடு மற்றும் இரட்டை நிலைப்பாடு. என் கணவர் இதைப்பற்றி என்னிடம் எதுவும் கேட்டதும் இல்லை.. கவலைப்பட்டதும் இல்லை.. நாங்கள் இது குறித்து பேசியதும் இல்லை’ என அவர் கூறியிருக்கிறார்.
