×

ரஜினியைப் பார்க்க 10 ஆண்டுகளாக முயற்சி செய்த கிங் காங்! ஒரே ஒரு வீடியோவால் நடந்த மாற்றம்

நடிகர் கிங் காங் தான் தேசிய விருது பெற்றதை அடுத்து அந்த விருதோடு நடிகர் ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டிள்ளார்.

 

நடிகர் கிங் காங் தான் தேசிய விருது பெற்றதை அடுத்து அந்த விருதோடு நடிகர் ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டிள்ளார்.

நடிகர் கிங் காங் தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை நடிகர்களுடன் நடித்துள்ளார். குறிப்பாக வடிவேலுவுடன் அவர் நடித்த காட்சிகள் வெகு பிரபலம், இவர் 1990 ஆம் ஆண்டு நடிகர் ரஜினி நடித்த அதிசயப் பிறவி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் அவர் ஆடும் பிரேக் டான்ஸ் வெகுவாக ரசிக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு 2009 ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் கையால் தேசிய விருது வழங்கப்பட்டது.

அந்த விருதுடன் ரஜினியோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என கிங் காங் ஆசைப்பட்டுள்ளார். ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அது நடக்கவில்லை. இது பற்றி இணையதள சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அந்த வீடியோ ரஜினியின் பார்வைக்கு செல்ல அவர் கிங் காங்குக்கு தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.  அந்த உரையாடலின் போது கொரோனா அச்சுறுத்தல் முடிந்த பின்னர் கண்டிப்பாக சந்திக்கலாம் என உறுதியளித்துள்ளாராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News