பேச்சுலர் வாழ்க்கையில் மனைவியை மறந்த கிங்ஸ்லி - என்ன கொடுமை சார் இதெல்லாம்?
காமெடி நடிகர் கிங்ஸ்லி:
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக பார்க்கப்படுவர் தான் நடிகர் கிங்ஸ்லி. இவர் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

குறிப்பாக இவரது நடிப்பு திறமை மற்றும் வேகமான பேச்சு, தனித்துவமான பேச்சின் நடை இது எல்லாமே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. டாக்டர் , அண்ணாத்த, லவ் டுடே, மற்றும் ஜெயிலர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் கிங்ஸிலியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
மனைவியை மறந்த கிங்ஸ்லி:
இதனிடையே சீரியல் நடிகையான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது இந்த நிலையில் மனைவியுடன் சேர்ந்து நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற கிங்ஸ்லி... நான் பேச்சிலர் வாழ்க்கை ஞாபகத்திலேயே என் மனைவியை மறந்து விட்ட கொடுமைகள் எல்லாம் நடந்திருக்கு எனக் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டார் .

ஆம் திருமணம் ஆன 4-வது நாளில் என்னுடைய மனைவியை வீட்டில் வைத்து பூட்டி விட்டு நான் ஆபீசுக்கு சென்று விட்டேன். பிறகு அவர் போன் செய்த பிறகு வந்து கதவை திறந்தேன். பேச்சுலர் வாழ்க்கையில் மூழ்கிப்போன நான் மனைவி இருப்பதையே மறந்துவிட்டேன் என கூறினார்.
பின்னர் பேசிய சங்கீதா... ஆமாம் ஒருமுறை ஹோட்டல் ஒன்றுக்கு நாங்கள் சென்று இருந்தோம். அப்போது நான் இருப்பதையே மறந்து அவர் அவருக்கு மட்டும் ஒரே ஒரு டீ ஆர்டர் செய்து கொண்டார் என சங்கீதா கூற
மனுஷனுக்கு இவ்வளவு மறதியா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
