×

சீமராஜாவின் மருத்துவர் படம் தள்ளிப்போனது அதுக்கு இல்ல... கசிந்த உண்மை
 

மருத்துவர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதற்கான உண்மையான காரணம் தேர்தல் மட்டும் இல்லை எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.
 
 
சீமராஜாவின் மருத்துவர் படம் தள்ளிப்போனது அதுக்கு இல்ல... கசிந்த உண்மை

டிவியில் துவங்கி தற்போது கோலிவுட்டில் ஹிட் நாயகனாக இருக்கும் நடிகர். தற்போது மருத்துவம் சார்ந்து ஒரு கதையில் நடித்து முடித்திருக்கிறார். படத்திற்கு தற்போது நல்ல வரவேற்பு இருக்கிறது. படத்தின் இரண்டு சிங்கிள் சமீபத்தில் வெளியானது. அப்பாடல்களுக்காக இயக்குனர், ஒல்லி மியூசிக் டைரக்டருடன் சீமராஜாவும் இணைந்து டீசர் வெளியிட்டு பாடல் அறிவிப்பை வெளியிட்டனர். அந்த ட்ரெண்டே செம வைரலாக பரவியது.

தொடர்ந்து, இம்மாதம் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், சட்டமன்ற தேர்தல் வர படத்தின் வெளியீட்டை படக்குழு இரண்டு மாதங்கள் தள்ளி வைத்தது. அதற்கு தேர்தல் மட்டும் காரணம் கிடையாதாம். இப்படத்தின் வியாபார பிரச்சனையில் படக்குழுவுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே சமரசம் ஏற்படவில்லை. தயாரிப்பு தரப்பு கேட்ட தொகையை விநியோகஸ்தர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. தொடர் பேச்சுவார்த்தை எழ, படக்குழு தேர்தல் முடியட்டும் என நிறுத்தி வைத்திருக்கிறார்களாம்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News