லோகி அண்ணா நீங்க ஃபர்ஸ்ட் ‘மேக்ஸ்’ படத்த பாருங்க.. ‘கைதி2’க்கு ஆப்பு வச்ச கிச்சா சுதீப்
லோகேஷின் அறிமுகம்:
மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அந்த படத்திற்கு பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் கூட்டணி அமைத்து கமர்சியல் பேக்கேஜாக படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் ஒரு நீங்கா இடம் பிடித்தார் லோகேஷ். தற்போது ரஜினியை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்கிய படங்களில் கைதி திரைப்படம் ரசிகர்களை பெரிய அளவில் திருப்திப்படுத்தியது என்று சொல்லலாம்.
அதுவரை எந்த ஒரு படமும் ஒரே இரவில் நடந்து முடியும் கதை பற்றி வெளியாகவில்லை. ஆனால் கைதி திரைப்படம் முற்றிலுமாக மாறுபட்ட கதையம்சம் கொண்டதாக அமைந்திருந்தது. ஒரே இரவில் நடந்த கதையாக அதுவும் பட முழுக்க இருட்டையே காட்டி அந்தப் படத்தையும் மாபெரும் வெற்றியடைய செய்தார் லோகேஷ் கனகராஜ். அதனால் அந்தப் படம் இன்றளவும் ரசிகர்களுக்கு பிடித்தமான படமாகவே இருந்து வருகிறது.
அனைவருக்கும் பிடித்த கைதி:
கைதி திரைப்படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருப்பார். கூடவே நரேன், அர்ஜுன் தாஸ் என பல நடிகர்கள் நடித்திருந்தனர். லோகேஷ் கனகராஜ் பொருத்தவரைக்கும் அவர் படங்களின் காட்சிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
அப்படித்தான் எல்லா படங்களிலும் காட்சிகளை நகர்த்தி இருக்கிறார். அதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். இந்த நிலையில் இன்று கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் மேக்ஸ் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட இந்த படம் கைதி படத்தை போலவே இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அச்சு அசல் கைதியை போல மேக்ஸ்:
அதேபோல போலீஸ் ஸ்டேஷன், ஒரே நாள் இரவில் நடக்கும் காட்சிகள், இரண்டு கைதிகளை சிறை செய்து வைத்திருக்கின்றனர், அவர்களை மீட்க ரௌடிகள் வெளியில் போலீஸ் ஸ்டேஷனை துவம்சம் செய்கின்றனர். ஒரு புல் கமர்சியல் பேக்கேஜாக இந்த மேக்ஸ் திரைப்படம் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் பார்த்தால் கண்டிப்பாக கைதி 2 படத்தை எடுக்கும் எண்ணத்தை கைவிட்டு விடுவார். ஏனெனில் கைதி படத்தைப் போலவே இந்த படமும் இருக்கிறது என கூறி வருகிறார்கள். அதனால் கைதி 2 படத்தை எடுப்பதற்கு முன் லோகி அண்ணா தயவு செய்து மேக்ஸ் திரைப்படத்தை பார்த்துவிட்டு எடுங்கள் என அறிவுரைகளையும் கூறி வருகின்றனர்.