48 ஆண்டுகள் நிறைவு செய்த கிழக்கே போகும் ரயில்
பதினாறு வயதினிலே மாபெரும் வெற்றிக்கு பின் பாரதிராஜா இயக்கி இரண்டாவது படம் கிழக்கே போகும் ரயில். சுதாக்ர் என்ற அறிமுக நாயகனையும், ராதிகா என்ற அறிமுக நாயகியையும் வைத்து எடுத்த ஒரு அற்புதமான படைப்பு இது. பதினாறு வயதினிலே படத்தினை தயாரித்த அம்மன் கிரியேஷன்ஸ் சார்பில் ராஜகண்ணு இப்படத்தையும் தயாரித்திருந்தார்.

முதல் படத்தில் மயிலுடன் வந்த பாரதிராஜா தனது இரண்டாவது படத்தில் ரயிலுடன் வந்தார். ஆம் இந்த படத்தில் ரயில் ஒரு முக்கிய பாத்திரத்தை பெற்றிருந்தது. படத்தின் கதை அன்னகிளி செல்வராஜ் எழுதியிருந்தார். உதவி வசனம் நம்ம கே. பாக்யராஜ் செய்திருந்தார். ஒரு கிராமத்தில் மனிதர்களீன் இயல்பான வாழ்க்கை வசனத்தை அற்புதமாக காட்டியிருப்பார்கள் இவர்கள்.

படத்தின் மற்றொரு ஹோரோ இளையராஜா. பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. மாஞ்சோலைக் கிளிதானோ பாடம் அந்த கால கட்டத்தில் பாடாத விழாக்களே இல்லை. கோயில்மணி ஓசை தன்னை கேட்டதாரோ, பூவரசம்பூ பூத்தாச்சு இன்றும் எவர்கிரீன் லிஸ்டில் உள்ளது. சினிமாவில் இன்று வரை ஒரு சென்டிமெண்ட் உள்ளது. முதல் படம் சூப்பர் ஹிட் என்றால் இரண்டாவது படம் நிச்சயம் தோல்வி அடையும் என்று. அந்த விதியை அப்போதே உடைத்தவர் பாரதிராஜ். இந்த படம் அப்போதே 365 நாட்கள் வரை ஓடியது.
கிழக்கே போகும் ரயில் கடந்த 1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியானது. படம் வெளியாகி இன்றுடன்ன் 48 ஆண்டுகளாகின்றன. இன்னும் பல ஆண்உகள் ஆனாலும் இப்படத்தின் தாக்கத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்பப்தே உண்மை.