×

சரத்குமார் இத்தனை நடிகைகளையா காதலித்தார்? - லிஸ்ட் பெருசா இருக்கே!....

 
sarathkumar

தமிழ் சினிமாவில் வினியோகஸ்தர், தயாரிப்பாளர் என நுழைந்தவர் சரத்குமார். அதன்பின் வில்லன் நடிகராக மாறி பல திரைப்படங்களில் வில்லனாக நடித்தார். அதன்பின் விஜயகாந்தின் தயவில் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். அதன்பின் ஹீரோவாக தொடர்ந்து நடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்து முன்னணி நடிகராக மாறியவர். குறிப்பாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் செம ஹிட். ஏற்கனவே திருமணமாகி இவருக்கு 2 மகள் உண்டு. அதில் ஒருவர்தான் வரலட்சுமி. அவர் சிறியவர் இருக்கும் போதுதான் திரைத்துறையில் வளர துவங்கினார் சரத்குமார்.

sarathkumar

ஆனால், காதல் மன்னனாக வலம் வந்தார் சரத்குமார். நடிகை வினிதாவுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாக சினிமா துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் கூறுகிறார்கள். அதன்பின், நடிகை தேவயானியை அவர் காதலித்தார். அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு அவரின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டார். தேவயாணிக்கும் சரத்குமார் மீது விருப்பம் இருந்துள்ளது. ஆனால், ஏற்கனவே, திருமணமாகி குழந்தை இருக்கும் காரணத்தை காட்டி தேவயாணியின் தாய் சரத்குமாரின் ஆசையை ஏற்கவில்லை.

sarath

அதன்பின், ‘இதயம்’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஹீராவை அவர் காதலித்தார். ஆனால், நான் மும்பை பெண்.. இருவருக்கும் வேறு வேறு கலாச்சாரம்...ஒத்து வராது என முகத்திற்கு நேராக கூறிவிட்டு குட் பை சொல்லிவிட்டார் ஹீரா.

அதன்பின், ‘காதலன்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரஜினியுடன் ஜோடி போட்ட நடிகை நக்மாவை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டார். சென்னை கொட்டிவாக்கத்தில் அவருக்கு வீடு வாங்கி கொடுத்து லிவ்விங் டூ கெதரிலும் இருந்தார். சரத்குமாருக்காக சொந்தம் படம் எடுத்து நஷ்டப்பட்டார் நக்மா. அதன்பின் சில காரணங்களால் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 

heera

நக்மாவுக்கு பின்னர் ராதிகா மீது சரத்குமாருக்கு காதல் வந்தது. ராதிகா ஏற்கனவே 2 முறை திருமணமாகி கணவரை பிரிந்தவர். ஒரு மகளும் இருந்தார். எனவே, அவர் சரத்குமாரை ஏற்றுக்கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான்., 

தன்னுடன் நடிக்கும் நடிகைகள் மீது காதல் கொண்டு திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு காதல் மன்னனாக வலம் வந்த சரத்குமார் ராதிகாவின் கட்டுப்பாட்டால் அவருடன் ஒழுங்காக குடும்பம் நடத்தி வருகிறார் சரத்குமார். 

radhika

இந்த தகவல்கள் அனைத்தையும் பத்திரிக்கையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஒரு யுடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News