×

 கவிதையே தெரியுமா... கயிறு கட்டி தலைகீழ தொங்கும் சமந்தா!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது கணவரின் அறிவுரைப்படி முழு வீச்சில் யோகாவில் இறங்கியுள்ள சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " காலில் கயிறு கட்டிக்கொண்டு தலைகீழாக தொங்கும் யோகா போட்டோவை வெளியிட்டுள்ளார்." இது ஜெயம் ரவியின் "கவிதையே தெரியுமா" பாடலின் சமந்தா வெர்சன் என கமெண்ட் அடித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

View this post on Instagram

Congratulations you and I made it to July 🙆‍♀️ ....

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

From around the web

Trending Videos

Tamilnadu News