×

கெட்டவார்த்தை பேசி கோபத்தைக் காட்டிய கோலி – பத்திரிக்கையாளர் சந்திப்பில் சர்ச்சை !

இன்று இந்திய அணியின் கேப்டன் கோலி மைதானத்தில் நிதானத்தை இழந்து ஆபாச வார்த்தைகளை பேசியது சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.

 

இன்று இந்திய அணியின் கேப்டன் கோலி மைதானத்தில் நிதானத்தை இழந்து ஆபாச வார்த்தைகளை பேசியது சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.

இந்திய அணி நியுசிலாந்திடம் 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்து வொயிட் வாஷ் ஆகியுள்ளது. இதனால் இந்திய அணியின் மீதும் கேப்டன் கோலியின் மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் கோலி தற்போது வேறு ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்திய அணி இன்று பந்துவீசிய போது பும்ரா நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது களத்தில் இருந்த கோலி மிகவும் ஆக்ரோஷமாக ரசிகர்களைப் பார்த்து ஆபாச வார்த்தைகளை பேசி வாயை மூடுமாறு சைகை காட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதையடுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதுபற்றி கேள்வி எழுப்பிய போதும் கோலி ‘அதுபற்றி நடுவரிடம் பேசிவிட்டேன். அவருக்கு பிரச்சனை இல்லை என சொல்லிவிட்டார். அத்தோடு முடிந்தது’ எனக் கோபமாகப் பேசினார். அவரது இந்த பதில் பரபரப்பையும் கண்டனங்களையும் பெற்றுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News