×

பிக்பாஸ் ஹவுஸுக்குப் போகும் கோலிவுட்டின் மூத்த நடிகர்!

நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ இதுவரை 4 சீசன்கள் முடிந்து விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க இருக்கிறது. 
 
 
பிக்பாஸ் ஹவுஸுக்குப் போகும் கோலிவுட்டின் மூத்த நடிகர்!

பிக்பாஸின் ஐந்தாவது சீசனில் கலந்துகொள்பவர்கள் பற்றி ஏற்கனவே தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு சீசனிலும் இளம் நடிகர், நடிகைகள் முதல் சீனியர்கள் பலரும் இடம்பெற்றிருந்தனர். கடந்த சீசன்களில் ஆனந்த் வைத்தியநாதன், பொன்னம்பலம், மோகன் வைத்யா, சுரேஷ் சக்கரவர்த்தி என சீனியர்களும் இடம்பெற்றிருந்தனர். 

அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் காமெடி மற்றும் குணச்சித்திரா நடிகரான எம்.எஸ்.பாஸ்கர். கமலுடன் உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் எம்.எஸ்.பாஸ்கர். கோலிவுட்டின் மூத்த நடிகர்களுள் ஒருவரான இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் போவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்கிறார்கள். பிக்பாஸின் ஐந்தாவது சீசன் ஜூன் மாதத்தில் தொடங்க இருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News