×

கணவருக்கும் வாய்ப்பு கொடுங்க... ஒரே விளம்பரத்தில் இரண்டு சம்பளம்... பலே நடிகை

தமிழ் சினிமாவின் 90ஸ் நடிகையின் பலே ஐடியா தான் தற்போதைய கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
 
கணவருக்கும் வாய்ப்பு கொடுங்க... ஒரே விளம்பரத்தில் இரண்டு சம்பளம்... பலே நடிகை

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் புன்னகை நடிகை. பெரிதாக கிளாமர் காட்சிகளில் நடிக்காதவருக்கு ரசிகர்கள் குவிந்தனர். தொடர்ந்து, ஒரு நடிகரை காதலித்தார். ஆனால், அவரின் குடும்பமோ நடிகைக்கு நோ சொல்லிவிட்டது. இதனால் ஒரு நட்சத்திர ஜோடியை கோலிவுட்டும் இழந்தது. இருந்தும், அம்மணி நடிகரை தான் திருமணம் செய்வேன் என்று ஒற்றைக் காலில் நின்றார். அவரின் ஆசைப்படியே பிரசன்ன நடிகரை பிடித்து திருமணமும் செய்து கொண்டார். இந்த குழப்பத்தில் அம்மணி தனது கோலிவுட் கனவுக்கன்னி ஸ்பாட்டை தவறவிட்டார்.

ஆனால், அவரின் நடிப்புக்காகவே பல விளம்பர படங்கள் கிடைத்தது. அந்த வாய்ப்பை பக்காவாக பயன்படுத்திக் கொண்டார். தற்போது விளம்பரத்துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார். இது ஒரு புறமிக்க, நடிக்க வாய்ப்பு கொடுக்க வரும் இயக்குனர்களிடம் என் கணவரையும் கூட நடிக்க வையுங்க என கறார் காட்டி வருகிறார் என கிசுகிசுக்கப்படுகிறது. எம்மா, உனக்கு வேலையே இல்லையா!

From around the web

Trending Videos

Tamilnadu News