×

கொரோனா பயத்துல ஓடிப்போனவங்க... இதுக்கு வந்துடுவாங்களா... நடிகையைச் சுற்றும் சர்ச்சை

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அந்த வாரிசு நடிகையின் செயல் கோலிவுட் வட்டாரத்தையே அதிரவைத்திருக்கிறது.  
 
கொரோனா பயத்துல ஓடிப்போனவங்க... இதுக்கு வந்துடுவாங்களா... நடிகையைச் சுற்றும் சர்ச்சை

வாரிசு நடிகையாக இருந்தாலும் திறமையாலும், கவர்ச்சியாலும் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் அந்த நடிகை. தமிழின் முன்னணி நடிகரோடு முதல்முறையாக ஜோடி போட்டார். 

படத்தின் ஷூட்டிங்கின்போதே பாதியில் நடிகை ஸ்பாட்டைக் காலி செய்தார். என்னவென்று விசாரித்தால், நடிகர் ரசிகர்களோடு நெருக்கமாக இருந்ததால் ஏற்பட்ட கொரோனா பயத்தால் அம்மணி ஸ்பாட்டைக் காலி பண்ணியது தெரிந்தது. ஒருவழியாக சமாதானம் செய்து அவரை ஷூட்டிங்குக்கு கூட்டி வந்தார்கள். 

ஷூட்டிங் முடிந்து இறுதிகட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும்போதே இயக்குனர் மறைந்தது படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்குப் படக்குழுவினர் அனைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதோடு, மரியாதையும் செய்தனர். ஆனால், நடிகையோ பெயருக்குக் கூட அதைப்பற்றி வெளியே பேசவில்லை. நேரிலும் வந்து அஞ்சலி செலுத்தவில்லை. 

`கொரோனா பயத்துல ஓடிப்போன அவங்களா, இதுக்கு வரப்போறாங்க?’ எனப் படக்குழுவினர் தலையில் அடித்துக் கொள்கிறார்களாம். இது சர்ச்சையாகியிருக்கிறது. 
 

From around the web

Trending Videos

Tamilnadu News