என்ன ஆனாலும் கண்டுக்கவே மாட்டேங்குறாரே... புலம்பும் முன்னணி நடிகை

தமிழ், தெலுங்கு என இரண்டு இண்டஸ்டிரிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அந்த நம்பர் நடிகை. தமிழில் கமர்ஷியல் இயக்குனரால் அறிமுகப்படுத்தப்பட்டாலும், உச்ச நடிகரோடு அடுத்தடுத்த படங்களில் ஜோடி போட்டதுதான் நம்ம நடிகையை முன்னணி இடத்துக்குக் கொண்டு போனது.
அடுத்தடுத்த படங்களால் ஹீரோவுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நிலைக்கு உயர்ந்தார். கமர்ஷியல் படங்கள், முன்னணி நடிகர்கள் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தாலும், ஒருபுறம் ஹீரோயின் லீட் ரோலில் இருக்கும் படங்களையும் பார்த்துப் பார்த்து நடித்து வந்தார். இதனால், ரசிகர்களிடம் அவருக்கான கிராஃப் வெகுவாக உயர்ந்தது. இதைக் காரணமாக வைத்து சம்பளத்தையும் கோடிகளில் பேசினார்.
ஆனாலும், நம்ம நடிகைக்கு முன்னணி நடிகரோடு ஜோடி போடவில்லையே என்ற கவலை இருக்கிறதாம். அதனால், அவருக்குப் பல வழிகளில் தூது விட்டுக் கொண்டிருக்கிறாராம். ஆனாலும், அந்த நடிகர் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தாணுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிறாராம். இதனால், தனக்கு நெருக்கமானவர்களிடம் இதைச் சொல்லி புலம்புகிறாராம் நடிகை.