×

கொரோனாவை  நசுக்கி கொள்ளும் கோலிவுட் டான்ஸ் - ட்ரெண்டாகும் அனிமேஷன் வீடியோ!

சீனாவில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவ துவங்கிய கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து நாள் ஒன்றுக்கு லட்ச கணக்கில் மனிதர்கள் பலியாகி வருகின்றனர். இதனால் தொடர்ந்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு தனிமனிதர் ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் இருக்க அறிவுரை வழங்கி வருகின்றனர்.

 

அந்தவகையில் தற்ப்போது கோலிவுட் பிரபலங்களான அஜித் , விஜய் , ரஜினி , தனுஷ் , சூர்யா உள்ளிட்ட கேரக்டரின் அனிமேஷனை உருவாக்கி கொரோனாவை வேட்டையாடி கொள்வதுபோல் உருவாக்கப்பட்டுள்ள குறும்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

இதுகுறித்த ஒரு குட்டி விமர்சனத்தை பார்ப்போம்: Kollywood Heroes - Corona War Animation என்ற இந்த விழிப்புணர்வு குறும்படத்தில் மாஸ்டர் பட லுக்கில் வரும் விஜய், அரக்கனாக வரும் கொரொனா வைரஸை ஒரு லத்தியை வைத்து அடித்து நொறுக்குகிறார். தொடர்ந்து அவருக்கு உதவியாக விவேகம் அஜித், எந்திரன் ரஜினி, மாரி தனுஷ் , கைதி கார்த்தி, என கோலிவுட் பட்டாளமே குவிவதாக காட்டப்பட்டுள்ளது. இறுதியாக வரும் 24 பட சூர்யா டைம் ட்ராவல் செய்து சைனாவில் வௌவால் சூப் சாப்பிடாமல் தடுப்பதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாளில் மாஸ்டர் ட்ரைலர் வராவிட்டாலும் இந்த குறும்படம் சிறப்பான சம்பவத்தை செய்துள்ளது. இதோ அந்த வீடியோ..


From around the web

Trending Videos

Tamilnadu News