தீபாவளிக்கு களம் இறங்கும் 5 திரைப்படங்கள்!.. வேகமாக துண்டை போட்ட விடுதலை 2 டீம்!..
Jun 10, 2024, 18:30 IST
Diwali release 2024: திரையுலகை பொறுத்தவரை தீபாவளி மற்றும் பொங்கல் ரிலீஸ் என்பது மிகவும் முக்கியமானது. அந்த தினத்தில் தங்களின் படங்கள் ரிலீஸ் ஆகவேண்டும் என பெரிய நடிகர்களே ஆசைப்படுவார்கள். பல எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி படங்கள் தீபாவளி மற்றும் பொங்கலுக்கு வெளியானது. அவர்களுக்கு பின் ரஜினி, கமல் ஆகியோரின் படங்களும் தீபாவளி, பொங்கலுக்கு வெளியானது. அதன்பின், விஜய் - அஜித் இந்த பட்டியலில் இணைந்தனர். ஆனால், கடந்த சில வருடங்களாக தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாவதில்லை. அல்லது ஒரு பெரிய நடிகரின் படம் மட்டுமே வெளியாகும். அதற்கு காரணம், ரஜினி, விஜய், அஜித் போன்றவர்கள் வருடத்திற்கு ஒரு படம்தான் நடிக்கிறார்கள்.
ஆனால், இந்த தீபாவளிக்கு 5 படங்களில் தீபாவளி ரேசில் களமிறங்கவிருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. மிகவும் அதிக பொருட்செலவில் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். சூர்யா நடித்திருக்கும் முதல் சரித்திர திரைப்படம் இது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், பல காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டு வருகிறது. ஆனாலும், எப்படியாவது படத்தை முடித்து தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறது லைக்கா நிறுவனம்.
Ganguva நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடித்து வரும் திரைப்படம் கிஸ். ஸ்டார் படம் ஓரளவுக்கு வசூலை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தையும் தீபாவளிக்கு வெளியிட்ட திட்டமிட்டிருக்கிறார்கள். அதேபோல், வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து வரும் விடுதலை 2 படத்தையும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு அதற்கான வேலையை பார்த்து வருகிறார்கள். அதேபோல், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்.ஐ.சி. லவ் டுடே ஹிட்டுக்கு பின் பிரதீப் நடித்திருக்கும் திரைப்படம் இது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி என பலரும் நடித்திருக்கிறார்கள். மொத்தத்தில் வருகிற தீபாவளிக்கு இந்த 5 படங்களும் வருவதால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.