Connect with us

Cinema News

மின்னல் வேகத்தில் வளர்ந்து தொடர் தோல்வி: ஆனாலும் ஒரு நாளைக்கு 1 கோடி கேட்டு அடம் பிடிக்கும் நடிகர்!

தமிழ் சினிமாவில் மிகவும் குறுகிய காலத்தில் தன் திறமையை வெளிப்படுத்தி வாரிசு நடிகர்களையே ஓரம் தள்ளிவிட்டு முன்னணி நடிகராக மார்க்கெட் பிடித்தவர் தான் அந்த நடிகர். முதல் மூன்றெழுதில் தளபதி பெயர் வைத்திருக்கும் அந்த நடிகர் கிடுகிடுவென வளர்ந்த வேகத்தில் தன்னுடன் நடித்த நடிகையுடன் அப்படி இப்படி உறவு வைத்துக்கொண்டார்.

நடிகைக்கு ECR ல் வீடு வாங்கி கொடுத்து வாழ வைத்து வருவது மட்டுமல்லாமல் தான் நடிக்கும் படங்களின் இயக்குனரிடம் கன்டீஷன் போட்டு அந்த நடிகைக்கு எதாவது ஒரு ரோல் கொடுத்து விடுகிறார். கூடவே கோடி கணக்கில் கடன் வேறு. கடனை அடைக்க வரும் வாய்ப்புகளுக்கெல்லாம் தலையாட்டிவிட்டு அட்வான்ஸ் தொகை பல்கா வாங்கி கொள்கிறாராம்.

இதனால் கதை தேர்வில் கோட்டைவிட்ட அந்த நடிகர் கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் இழுத்துப்போட்டு நடித்து கடைசியாக அடுத்தடுத்து வெளியான மூன்று படங்களுமே தொடர் தோல்வி அடைந்து கோலிவுட்டில் சறுக்கலை சந்தித்துள்ளார். சார் வேகமாக உச்சத்தை தொட்டதால் பல மொழிகளில் இருந்து வாய்ப்புகள் கிடைக்கிறது.

தமிழை தவிர கிடைக்கும் மற்ற மொழி படங்களில் நடிக்க ஒரு நாளைக்கு 1 கோடி கேட்டு ஆடம் பிடிக்கிறாராம். அதற்கு தயாரிப்பாளர்கள் சம்மதம் கூறி பெரிய தொகையை அட்வைஸாக கொடுப்பது தான் பெரும் ஆச்சர்யம். இனிமேலாவது நல்ல படங்கள் நடிக்க வேண்டும் என அந்த நடிகர் உட்கார்ந்து யோசிச்சுட்டு வாறாராம்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in Cinema News

To Top