கோலிவுட்டின் பெரிய இசையமைப்பாளருக்கும், பெத்த தயாரிப்பாளர் மகளுக்கும் கல்யாணம்!

கோலிவுட்டை பரபரப்பாக்கும் சமீபத்திய தகவல்
 
gossip

தமிழ் சினிமாவில் பரபரப்பு இல்லை என்றால் எப்படி? அந்த குறையை தீர்க்கும் விதமாக கடந்த சில நாட்களாகவே ஒரு சம்பவம் பேசப்பட்டு வருகிறது. கிசுகிசு எனக் கூறப்பட்டது தற்போது உண்மையாகவே நடக்க இருக்கிறதாம். 

தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் வரை கலக்கி வரும் பிரபல ஒல்லி இசையமைப்பாளர் பாடல்களுக்கு எப்போதுமே மவுசு தான். அதனாலே தற்போதைய டாப் டயர் நடிகர்கள் அவரிடம் தான் கால்ஷூட்டுக்கு உட்கார்ந்துவிட்டனர். 

மார்க்கெட்டில் மவுசு இருப்பதால் தன்னுடைய கல்யாணத்தை தள்ளிப்போட்டவருக்கு இப்போ இடியென ஒரு தகவல் வந்துருக்காம். ஜாதகப்படி ஐய்யாவின் கல்யாணத்தை இந்த வருடத்திற்குள் முடிக்க வேண்டுமாம். 

அதனால் வீட்டில் உடனே கல்யாண வேலையை துரிதப்படுத்துகின்றனராம். ஐயா ஒரு பெரிய தயாரிப்பாளர் வீட்டு மகளுடன் பிஸியாக வலம் வந்தார். அந்த அம்மணி தற்போதையை ஐபிஎல்லில் என்சாய் செய்து வருகிறார். இதனால் இன்னும் மூணு மாசத்தில் திருமணம் வைக்கலாம் என பேச்சு அடிப்படுகிறதாம். 

அதிலும் கல்யாணத்தை வெளிநாட்டில் படுகிராண்டாக வைக்கவும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வந்தால் தான் மத்த விஷயமெல்லாம் உடையும் என்பதும் கூடுதல் சேதி!


 

From Around the web