Categories: Cinema News latest news

ரெண்டு எழுத்து நடிகர் போட்ட ஆக்டிங்… தமிழ் நடிகர்கள் ஆடிய பெட் மேட்ச்.. எல்லாமே கேடிதான்!

Kisukisu: மலையாள கரையோரம் நடந்த பிரச்சினையை மட்டுமே நாம் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ் பெத்த நடிகர்கள் கொஞ்சம் பயத்தில் இருப்பதாகவே தகவல்கள் கசிந்து வருகிறது.

உச்சத்தில் இருக்கும் நடிகர்களிடம் மலையாளத்தின் ஹேமா கமிட்டி குறித்து கேள்வி எழுப்பினால் பம்மி கொண்டு செல்கின்றனர். மற்ற விஷயங்களுக்கு தேவையில்லாமல் வாழ்த்து சொல்லும் இவர்கள் முக்கியமான இப்பிரச்சனைக்கு ஆதரவாக பேசாமல் இருப்பது இவர்கள் மீதான சந்தேகத்தை அதிகரிக்க செய்து வருகிறது.

இதையும் படிங்க: பொய் சொல்லலாம்.. ஆனா இப்படியா… குக் வித் கோமாளி பிரபலத்தினை கடுப்படித்த சிலம்பரசன்

இந்த பாலியல் புகார்களின் சிக்கும் நடிகர்கள் எதிலும் கவலைப்படாமல் தைரியமாக வாய் கொடுப்பதற்கு காரணம் இதனால் அவர்கள் தண்டிக்கப்பட போவதில்லை. இது வழக்காக பதியப்பட்டாலும் அதற்கு தகுந்த ஆதாரம் வேண்டும். அந்த  நம்பிக்கையில் தான் அவர்கள்  எதையும் கண்டு கொள்வதில்லை.

அதுமட்டுமல்லாமல் தமிழ் நடிகர்கள் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் லீக்கில் கிரிக்கெட் மட்டுமல்லாமல் அந்த சர்ச்சை நடிகை உடன் ஹோட்டலில் பெட் மேட்ச் விளையாடியதும் தற்போது கசிந்து வருகிறது. இதனால் தான் அந்த ரெண்டு எழுத்து நடிகர் செய்தியாளர்களிடம் பாய்ந்த அதிர்ச்சி சம்பவமும் நடந்ததாம்.

இதையும் படிங்க: பரபரப்பா போயிட்டு இருந்த கூலி ஷூட்டிங்கிற்கு சூனியம் வச்சிட்டானுங்களே.. பெரிய ஆளுதான்!

இவர் மட்டுமல்லாமல்  அந்த ரோஸ் கூட்டம் படத்தில் நடித்த நடிகரும், அரசை கலாய்த்து சர்ச்சையில் சிக்கிய இயக்குனரும் பெட் மேட்சில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மற்றும் மலையாளத்தின் உச்ச நட்சத்திரங்கள் இணைந்து சமீபத்தில் ஒரு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.

அதன்படி அவர்கள் கூட்டாக இணைந்து 60 முதல் 70 கோடியை சேகரித்து இந்த பிரச்சனையில் குரல் கொடுப்பவர்களின் வாயை அடைக்கவும் முடிவெடுத்திருப்பதாக ஒரு விஷயம் கசிந்து வருகிறது. இதனால் இன்னும் சிறிது தினங்களில் இது குறித்து பேசுவது முடக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily