Connect with us
gossip

Gossips

Gossip: ஓவர் ஆட்டம் போடும் நடிகர்… இதெல்லாம் நல்லா இல்ல தம்பி!

கோலிவுட்டின் இளம் ஹீரோ ஒருவர் தயாரிப்பாளர் செலவில் ஓவராக ஆட்டம் போடுகிறார் என்று அவரை வைத்து படமெடுத்து வருபவர் கண்ணீரில் மிதக்கிறாராம். கல்லூரி காதலியை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு அம்மாவான பின்னர் அற்ப காரணங்களை சொல்லி அவரை கழட்டி விட்டவர் நடிகர்.

கதைக்கு முக்கியத்துவம்

அப்பா காவல்துறை அதிகாரி என்பதால் இவரின் ஆட்டம் ஆரம்பம் முதலே ரொம்ப ஓவர் தான். சமீபத்தில் விளையாட்டு வீராங்கனை ஒருவரை மணந்தார். இருவரும் காதல் வானில் சிறகடித்து பறந்து வருகின்றனர். ஆரம்பத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த நடிகர் தற்போது படத்தின் ஷூட்டிங்கிற்கே ஒழுங்காக செல்வதில்லையாம்.

புதிய படத்தின் படப்பிடிப்பு

அண்மையில் குளுகுளு மலை பிரதேசத்தில் இவரின் புதிய படத்தின் படப்பிடிப்பு நடந்தது. மனைவியை வரச்சொல்லி விலையுயர்ந்த ஹோட்டலில் ரூம் போட்டு தயாரிப்பாளர் செலவில் இருவரும் சேர்ந்து ஆடிப்பாடி கும்மி அடித்துள்ளனர். இத்தனைக்கும் திட்டமிட்ட படப்பிடிப்பில் 10 சதவீதம் கூட முடியவில்லையாம்.

ஓவராக ஆட்டம்

இதனால் தயாரிப்பாளர், இயக்குனர் ரொம்பவே அப்செட். ஆனால் அதுகுறித்து நடிகர் துளிகூட கவலைப்படவில்லை என்கின்றனர். முன்னணி நடிகர்களை கூட ஓவராக ஆட்டம் போட்டால் ஒதுக்கி விடும் காலமிது.

சொந்த செலவில் சூனியம்

வளர்ந்து வரும் நடிகர் இப்படி தன்னுடைய சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்கிறாரே என கோலிவுட்டினர் உச்சு கொட்டி வருகின்றனர். இப்படியே போனால் படங்கள் குறைந்து விரைவில் வீட்டில் கணவன்-மனைவி இருவரும் கூடி கும்மியடிக்க வேண்டியது தான்!

இதெல்லாம் நல்லதுக்கு இல்ல அம்புட்டுதேன்!

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Gossips

To Top