×

கொரோனா இல்லாத மாநிலமாக மாறிய கொங்கு... இந்த பட்டியலில் இணைய துடிக்கும் சேலம்!

கொங்கு மாநகராட்சியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்துள்ளனர். 11 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளதால் அங்கு கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கியுள்ளது.

 

இதுதொடர்பாக கொங்கு மாநகராட்சி ஆணையர் சதீஷ் வெளியிட்ட அறிக்கையில் ஏப்ரல் 24ஆம் தேதிக்குப் பின்னர் கொங்கு மாநகர் பகுதிகளில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 பேரும் நலமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா இல்லாத மாநகராக கொங்கு உருவெடுத்துள்ளது.

கடந்த 62 நாள்களில் 30 ஆயிரம் கிலோ பிளீச்சிங் பவுடர் மாநகரில் தெளிக்கப்பட்டுள்ளது என்றும் 120 வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விநியோகிக்கப்பட்டது என்றும் , பொது கழிப்பறைகள் நாள் ஒன்றுக்கு மூன்று முறை சுத்தம் செய்யப்படுவதாகவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக சேலம் மாவட்டத்தில் 35 பேர் பாதிப்புக்குள்ளான நிலையில் 30 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News