×

கொரோனாவை விரட்டும் கோமியம், மாட்டு சாணி - அடடா நீ இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லம்மா!

“காற்றில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த சீனாவில் மாட்டுச் சாணம், மாட்டுக் கோமியம்  கொண்டு யாகங்கள் நடத்தி, காற்றை சுத்தம் செய்யலாம்”என அஸாம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுமன் ஹரிப்ரியா தெரிவித்துள்ளார்.
 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகளவில் 3ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் 2பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நோய் பரவாமலிருக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில், “மாட்டுக் கோமியம், மாட்டுச் சாணத்தில் மருத்துவ குணங்கள் அதிகமாகக் காணப்படுகிறது. முன் காலத்தில், முனிவர்கள் தங்கள் ஆசிரமத்தில் மாடுகளை வளர்த்து வந்தனர். இதனாலே ரிஷிகள் ஆயிரம் வருடங்கள் உயிர் வாழ்ந்துள்ளனர். கேன்சரை நாம் மாட்டுக் கோமியம், மாட்டுச் சாணத்தைக் கொண்டு குணப்படுத்த முடியும் என 8ம் அறிவை பயன்படுத்தி தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News