×

கொரோனாவா? அதுலாம் ஒன்னுமில்லை.. ஜாலியா இருங்க!  சுட்டி அஸ்வந்த் வெளியிட்ட வீடியோ

கொரோனா வைரஸ் தொடர்பாக ஜுனியர் நடிகர் சுட்டி அஸ்வந்த் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
 

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சுட்டி அஸ்வந்த். 

நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இது தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், எதற்கும் பயப்பட வேண்டாம். அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மகிழ்ச்சியாக இருங்கள். கைகளை சுத்தமாக கழுவுங்கள், முகமூடி அணிந்து கொள்ளுங்கள் என பெரிய மனிதர் போல் பக்குவமாக பேசியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News