Connect with us
vinoth raj

Cinema News

கொட்டுக்காளி பட இயக்குனரின் அடுத்த படம்!. ஹீரோ அவரா?!.. இந்த முறை வேற மாறியாம்!..

kottukkaali movie : கூழாங்கல் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் பி.எஸ்.வினோத் ராஜ். இந்த படம் பல விருதுகளை பெற்றது. அதன்பின் 2 வருடம் கழித்து வினோத் ராஜ் இயக்கியுள்ள திரைப்படம்தான் கொட்டுக்காளி. காமெடி நடிகராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இப்போது கதையின் நாயகனாக நடிக்க துவங்கியுள்ள நடிகர் சூரி இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

சினிமாவுக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் ஒரு நீளமான குறும்படம் எடுப்பது போலவே இப்படத்தை இயக்கியிருக்கிறார் வினோத் ராஜ். தன் முறைப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வருகிறான் பாண்டி. ஆனால், அவனின் முறைப்பெண்ணோ வேறு ஒருவனை நேசிக்கிறாள்.

இதையும் படிங்க: இந்த வருஷம் நான் ஆட்டத்துக்கே வரலை.. அஜித்தின் திடீர் முடிவால் கடுப்பான ரசிகர்கள்…

எனவே, மாமனை திருமணம் செய்து கொள்ள அவள் மறுக்க, அவளுக்கு பேய் பிடித்துவிட்டது.. பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு சாமியாரிடம் சென்றால் அவள் மனம் மாறி மாமனையே திருமணம் செய்து கொள்வாள் என நம்பி அவரை உறவினர்கள் எல்லோரும் சேர்ந்து அழைத்து செல்கிறார்கள். அவர்களுடன் சூரியும் செல்கிறார்.

அந்த பயணத்தில் என்ன நடந்தது?.. சூரி என்ன புரிந்து கொண்டார்? என்பதுதான் இப்படத்தின் கதை. இன்னமும், மதுரை மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் மக்களிடமுள்ள மூட நம்பிக்கையை அடிப்படையாக வைத்தே இப்படத்தை வினோத்ராஜ் இயக்கியிருக்கிறார். இப்படத்தை வெற்றிமாறன், மிஷ்கின், பாலா போன்ற இயக்குனர்களே பாராட்டி இருக்கிறார்கள்.

இந்த படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பின்னணி இசை கூட வைக்கப்படவில்லை. துணிந்தே இந்த முடிவை எடுத்திருக்கிறார் இயக்குனர். எனவே, ரசிகர்களுக்கு இந்த படம் எந்த அளவுக்கு பிடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

kottukkaali

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய வினோத் ராஜிடம் அவரின் அடுத்த படம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன வினோத்ராஜ் ‘ 2 படங்கள் கிராமம் சார்ந்து இயக்கி விட்டேன். அடுத்து சென்னையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க விரும்புகிறேன். இங்கே வாழும் மக்களின் பரிதவிப்பு, அவர்களின் வாழ்க்கை முறை இதை அடிப்படையாக வைத்து கதையை எழுத திட்டமிட்டிருக்கிறேன். அண்ணன் சிவகார்த்திகேயனுடன் இணைந்தே இதை செய்யப்போகிறேன்’ என சொல்லி இருக்கிறார்.

கொட்டுக்காளி படத்தை தயாரித்தது போல இந்த படத்தையும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாரா இல்லை அவரே நடிப்பாரா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

இதையும் படிங்க: இப்படி போர் அடிச்சிருக்க கூடாது… கொட்டுக்காளி படத்தில் சூரி மட்டும்தான்… ட்விட்டர் விமர்சனம்

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top