Categories: Cinema News latest news

கமலுக்கு ஜோடியா?.. வர மறுத்த நடிகை!. உலகநாயகன் என்ன செய்தார் தெரியுமா?..

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 60 வருடங்களை கடந்து சினிமாவில் இன்னும் இளம் தலைமுறையினருக்கு டஃப் கொடுத்து வரும் நடிகர் கமல்ஹாசன். சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி போன்ற பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பின் 80களில் ஹீரோவாக கொடி கட்டிப் பறந்தவர் கமல்.

kamal1

இன்றளவு வரை இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாகவே இருந்து வருகிறார். இந்த நிலையில் கமலுடனான தனது சுவாரஸ்ய அனுபவத்தை பிரபல நகைச்சுவை கோவை சரளா ஒரு பேட்டியின் போது பகிர்ந்தார். கவுண்டமணி, செந்தில்,வடிவேலு, விவேக் போன்ற காமெடி மன்னன்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நல்ல இடத்தை பெற்றவர் கோவை சரளா.

இவர் வளர்ந்து வரும் நடிகையாக இருந்த சமயத்தில் தான் ‘சதிலீலாவதி’ படத்தின் வாய்ப்பு கோவை சரளாவை தேடி வந்திருக்கிறது. முதலில் ஒருவர் கோவை சரளாவிடம் தொலைபேசியில் இந்த விவரத்தை சொல்லியிருக்கிறார். அப்போது சரளா ஒரு படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் இருந்தாராம். கமலுக்கு ஜோடி என்று சொன்னதும் அதை சரளா முதலில் பெருசாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.

kamal2

ஏனெனில் ஏராளமான படங்களில் பல முக்கிய காட்சிகளில் நடித்து விட்டு அதன் பின் திரையில் பார்க்கும் போது அந்த காட்சிகள் எல்லாம் வெட்டப்பட்டு அதன் பின் திரைக்கு ரிலீஸ் ஆகியிருக்குமாம். அதை கண்டு சில நேரங்களில் சரளா அழுததும் உண்டாம். அதனாலேயே ஒரு வேளை கமலுக்கு ஜோடியாக என அழைத்து அது சம்பந்தமான காட்சிகளை வெட்டி விட்டாலும் விடுவார்கள் என்ற ஒரு நினைப்பிலேயே அதை அலட்சியமாக எடுத்துக் கொண்டாராம்.

இதையும் படிங்க : முதன்முதலில் மூச்சு விடாமல் பாடியது இந்த பாடகர்தான்-அப்போ எஸ்.பி.பி. கிடையாதா?

ஆனால் உண்மையிலேயே தெலுங்கில் படு பிஸியாக இருந்த சரளா ஒரு 6 மாதங்களுக்கு கால்ஷீட் கிடைப்பது கஷ்டம் என சொல்லியிருக்கிறார். அதன் பின் நடிகர் கமலே நேராக சரளாவை போனில் அழைத்து ‘ஏதோ கால்ஷீட் இல்லை என்று சொன்னீர்களாமே?’என்று கேட்டிருக்கிறார். அதன் பிறகே கோவை சரளாவிற்கு ஒரு நம்பிக்கையே வந்திருக்கிறது. ஆனாலும் கமலிடமும் தனது கால்ஷீட் பற்றி கூறியிருக்கிறார்.

kamal kovai sarala

இருந்தாலும் கமல் ‘பரவாயில்லை, நீங்கள் அதெல்லாம் முடித்து விட்டு வாங்க’ என்று சொல்லிவிட்டு கிட்டத்தட்ட அந்தப் படத்தில் சரளாவிற்காக 4 மாதங்கள் காத்திருந்து அதன் பின்னரே படப்பிடிப்பை நடத்தியிருக்கின்றனர். திரையில் பார்க்கும் போது சரளாவிற்கும் கமலுக்கும் இருந்த அந்த கெமிஸ்ட்ரி இப்பொழுது பார்க்கும் போது கூட மெய்சிலிர்க்க வைக்கின்றது.

Published by
Rohini