×

மேடையிலே என் முகத்தில் டீ ஊற்றி அசிங்கப்படுத்தினாங்க - கண்ணீர் விட்டு அழுத பாலா!

மேடையில் கதறி அழுத KPY பாலா

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமடைந்தவர் KPY பாலா.  இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். இவரை அனைவரும் வெட்டுக்கிளி என்று அன்போடு அழைப்பார்கள்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முரட்டு சிங்கிள் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார். அப்போது மேடையில் தான் கடந்து வந்த பாதையை குறித்தும் தன்னுடைய அனுபவங்களை குறித்தும் பகிர்ந்து கொண்ட அவர், " எங்களை மாதிரி பசங்க எடுத்த உடனே மேல வந்திட முடியாது.

நான் ஒரு முறை மேடையில் பெர்பார்ம பண்ணும் போது சுட சுட டீ எடுத்து என் மேல் ஊத்தி அசிங்கப்படுத்தியிருக்காங்க. என கூறி மேடையிலேயே கண்ணீர் மல்க அழுதார். இதையடுத்து அங்கிருந்த தீனா உள்ளிட்ட சக கலைஞர்கள் அவருக்கு ஆதராவாக பேசி ஆறுதல் படுத்தினர். இந்த ப்ரோமோ வீடியோ தற்ப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News