KPY Bala: ஷூட்டிங்கில் ஓவர் அலப்பறை!.. KPY பாலா இப்படிப்பட்டவரா?!.. பகீர் தகவல்!..
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் பாலா. ஒருபக்கம் தான் சம்பாதிப்பதில் 75 சதவீதம் மக்களுக்கு உதவி வருகிறார் பாலா. கஷ்டப்படுபவர்களுக்கு சின்ன சின்ன தொழில் அமைத்து கொடுப்பது. மலை கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, ஆட்டோ வாங்கி கொடுப்பது உள்ளிட்ட பல உதவிகளை இவர் பலருக்கும் செய்திருக்கிறார். இது தொடர்பான பல வீடியோக்களை அவர் ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து ‘இவர் ஒரு வெளிநாட்டு கைக்கூலி.. இவருக்கு பின்னால் சமூக விரோத கூட்டம் இருக்கிறது’ என்றெல்லாம் சிலர் பேசினார்கள். ‘சரி என்னை வைத்து பேசி youtube-ல் பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் சம்பாதித்துக் கொள்ளட்டும். யார் என்ன சொன்னாலும் நான் மக்களுக்கு உதவி செய்வதை நிறுத்தப் போவதில்லை’ என்று பேட்டி கொடுத்தார் பாலா.
ஒருபக்கம் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவந்த பாலா ‘காந்தி கண்ணாடி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில்தான் பாலா பற்றிய சில செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

பாலா ஷூட்டிங் விஷயத்தில் இன்னொரு சிம்பு என்கிறார்கள். அதாவது தினமும் ஒரு மணி நேரம் தாமதமாகதான் ஷுட்டிங்கிற்கு வருவாராம். அதிலும் ‘சார் வந்து கொண்டிருக்கிறார். இன்னும் 10 நிமிடத்தில் சார் வந்துவிடுவார்.. சார் இன்னும் 5 நிமிடத்தில் வந்துவிடுவார்’ என அவரின் மேனேஜர் பாலாவை அஜித் ரேஞ்சுக்கு பில்டப் செய்வாராம். குறிப்பாக ஒரு சம்பவத்தை சொல்கிறார்கள். காந்தி கண்ணாடி ரிலீஸ் நேரத்தில் சென்னையில் ஒரு பிரபல FM ஸ்டுடியோவில் அப்படத்தில் நடித்த இயக்குனர் பாலாஜி சக்திவேல், பாலா, இயக்குனர் ஆகியோரை வரவழைத்து பேட்டி எடுக்க திட்டமிட்டுருக்கிறார்கள்.
எல்லோரும் சரியான நேரத்தில் போய்விட பாலா செல்லவில்லை. 2 மணி நேரம் காத்திருந்து விரக்தியடைந்த பாலாஜி சக்திவேல் ‘நான் தனியாக பேசிவிட்டு சென்று விடுகிறேன். அவர் வந்தால் நீங்கள் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என சொல்லிவிட்டு பேட்டி கொடுத்துவிட்டு சென்றுவிட்டாராம். அவர் சென்ற பின்னரே பாலா அங்கு போயிருக்கிறார். இப்படி பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த போதும் இப்படியே செய்திருக்கிறார் பாலா’ என சொல்கிறார்கள்.
மற்றவர்களுக்கு உதவி செய்வது எல்லாம் நல்ல விஷயம்தான். ஆனால் தொழில் என்று வரும்போது அதில் சரியாக இருக்க வேண்டும். குறிப்பாக ஓவர் பில்டப் எதுவும் செய்யாமல் பாலா ஷூட்டிங் வந்தால் அது அவரின் சினிமா எதிர்காலத்திற்கு நல்லது. இது போன்ற பல நடிகர்களை சினிமா தூக்கி எறிந்திருக்கிறது’ என்கிறார்கள் சினிமா பத்திரிக்கையாளர்கள்.
