#image_title
Gandhi Kannadi: விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் எல்லோரிடமும் பிரபலமானவர் பாலா. அடிப்படையில் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். இவரின் பெரிய பிளஸ் பாயிண்ட் டைமிங் காமெடி. ஒருபக்கம் தமிழகத்தின் பல ஊர்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.
இப்படியெல்லாம் சம்பாதிக்கும் பணத்தில் தனது அடிப்படை தேவைக்கான பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை மக்களுக்கே கொடுத்து விடுகிறார். ஆம்புலன்ஸ் வண்டி வாங்கி கொடுப்பது, ஆட்டோ வாங்கி கொடுப்பது, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வாங்கி கொடுப்பது, கஷ்டப்படுபவர்களுக்கு அடிப்படை வாழ்வாதாரத்திற்கு உதவுவது, உடல்நிலை பாதிக்கப்பட்டு உதவி இல்லாமல் இருப்பவர்களுக்கு பணம் கொடுத்து உதவுவது என பாலா செய்யும் உதவிகள் ஏராளம்.
பல கோடி சம்பளம் வாங்கும் பெரிய நடிகர்கள் செய்யாத உதவிகளை குறைந்த வருமானத்தை கொண்டுள்ள பாலா செய்வது பலரையும் ஆச்சரியப்படுத்துவதோடு, அவரை பலரும் பாராட்டியும் வருகின்றனர். இலவச மருத்துவமனையை கட்ட வேண்டும் என்பதுதான் பாலாவின் கனவு. தற்போது அதற்கான வேலைகளையும் செய்து வருகிறார். ஒருபக்கம் காந்தி கண்ணாடி என்கிற திரைப்படத்தில் பாலா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் வெளியானது.
இந்நிலையில், பிரபல சினிமா பத்திரிக்கையாளரான வலைப்பேச்சி அந்தணன் ஊடகம் ஒன்றில் படம் பற்றி பேசிய போது ‘பாலா காந்தி கண்ணாடி படத்தில் நடித்திருக்கக் கூடாது. எதிர்பார்ப்போடுதான் படத்திற்கு சென்றேன். ஆனால் படம் என்னை ஏமாற்றி விட்டது. படத்தில் அழுத்தமான கதை இல்லை. இந்த படத்தின் ஹீரோ பாலாஜி சக்திவேல்தான். அவரை சுற்றிதான் கதை நகர்கிறது. பாலாவுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. இந்த கதையில் எப்படி அவர் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பது தெரியவில்லை.
இப்போதெல்லாம் சினிமாவுக்கு வரும் அறிமுக நடிகர்கள் கூட தான் முதன்மையான கதாபாத்திரமாக இருக்க வேண்டும். தன்னைச் சுற்றி கதை நடக்க வேண்டும் என நினைக்கிறார்கள். பாலாவுக்கு இது கூட தெரியவில்லையா என ஆச்சரியமாக இருக்கிறது. மொத்தத்தில் வேறு ஒரு கதையை தேர்ந்தெடுத்து பாலா நடித்திருக்கலாம்’ என அவர் பேசி இருக்கிறார்.
Parasakthi: அமரன்…
STR49: வெற்றிமாறன்…
ஆதிக் ரவிச்சந்திரன்…
Goundamani: கோவையை…
TVK Vijay:…