25-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த கிருஷ்ணா!
Aug 1, 2026, 19:09 IST
'கழுகு' படம் மூலம் ஃபேமஸான நடிகர் கிருஷ்ணா, அதன் பிறகு பல படங்களில் நடித்தார். இப்போது இவர் போலீஸாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இது கிருஷ்ணாவின் சினிமா கரியரில் 25-வது படமாம். இந்த படத்தை அறிமுக இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கி வருகிறார்.
இதில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். சமீபத்தில், இதன் ஷூட்டிங் முடிவடைந்தது.
Excited…#KK25 pic.twitter.com/yyw97JACp2
— Balakrishnan (@DirBalakrishnan) August 1, 2026
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
