கிருஷ்ணா போலீஸாக நடிக்கும் Murder In Town போஸ்டர்ஸ்!

 
Murder in Town

கிருஷ்ணாவின் புதிய படத்தை புதுமுக இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கி கொண்டிருக்கிறார். இதில் ஹீரோயினாக பிந்து மாதவி நடித்துள்ளார்.

ஆல்ரெடி இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாம். இது கிருஷ்ணாவுக்கு அவரது திரையுலக வாழ்வில் 25-வது படமாம்.

இதில் அவர் போலீஸ் ரோலில் வலம் வரப்போகிறார். தற்போது, இந்த படத்திற்கு 'Murder in Town' என டைட்டில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்துள்ளார். விரைவில் இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.

From Around the web