முடிவடைந்தது Murder In Town படத்தின் முக்கியப் பணி!

 
Murder In Town

கிருஷ்ணா போலீஸ் ஆக நடிக்கும் புதிய படம் 'மர்டர் இன் டவுன்' (Murder In Town). இந்த படத்தை பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கி வருகிறார்.

இதில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக பிந்து மாதவி நடிக்க, முக்கிய வேடங்களில் பாண்டியராஜன், பாலசரவணன், சின்னி ஜெயந்த், சரவணன், கஜராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு ரஞ்சன் இசையமைக்கிறார், டி.கோபால் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்ஸ் வெளியானது.

இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்துக்கான டப்பிங் பணிகள் முடிவடைந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ வெளியாகியிருக்கிறது.

From Around the web