Categories: Cinema News latest news

இப்படி மாட்டிக்கிட்டிங்களே கிர்த்தி ஷெட்டி.?! இனி என்னவாக போகுதே தெரியலேயே.!

தற்போதெல்லாம் ரசிகர்கள் அவர்களின் அந்தந்த மொழி திரைப்படங்களை தாண்டி , மற்ற மொழி திரைப்படங்களையும் பார்க்க தொடங்கிவிட்டனர். அதனால் தான் வேற்று மொழியில் நடித்த ஹீரோயின்கள் கூட தென்னகம் முழுக்க தெரிந்து விடுகின்றனர்.

அப்படி தான் தெலுங்கில் உப்பேன்னா திரைப்படத்தில் அறிமுகமான கிர்த்தி ஷெட்டி, முதல் படத்திலேயே முத்திரை பதித்து, தென்னகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்துவிட்டார். தமிழில் கூட அவருக்கு ரசிகர்கள் ஏராளம் இருக்கின்றனர். இவர் தமிழில் எப்போது அறிமுகப்போகிறார் என காத்திருந்த வேளையில்,

தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் அந்த அறிவிப்பு ரசிகர்களை கொஞ்சம் ஷாக் ஆக்கியுள்ளது என்றே கூற வேண்டும். அழகான ஹீரோயினாக பார்த்த கிர்த்தி ஷெட்டியை தற்போது பாலா இயக்க உள்ள சூர்யா படத்திற்காக ஒப்பந்தம் செய்து அறிவித்துள்ளனர் .

இதையும் படியுங்களேன் – சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம்..,ஆஸ்கர் விருதின் முக்கிய பட்டியல் இதோ…

பாலா படமென்றால் ஹீரோயினுக்கு அழகான இன்ட்ரோ எல்லாம் இருக்காது. கதைக்கு என்ன தேவையோ அதான் இருக்கும். பெரும்பாலும் அழகான ஹீரோயின்கள் கூட அழுக்காக கதைக்கு ஏற்றபடி தான் பாலா படத்தில் தெரிவார்கள்.

அப்படி, கிர்த்தி ஷெட்டியின் கெட்டப் பாலா படத்தில் எப்படி வரப்போகுதோ என, ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஒருவேளை பாலா தனது ரூட்டை மாற்றி ஹீரோயினை அழகாக காட்டுகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Manikandan
Published by
Manikandan