Categories: Cinema News latest news

த்ரிஷாவை பார்த்தா எனக்கு அப்படித்தான் தோணுது!… பொறாமையில் வாயை விட்ட கிரீத்தி ஷெட்டி…

த்ரிஷா சமீபத்தில்தான் தனது 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த வயதிலும் தனது இளமை ததும்ப ததும்ப வலம் வருகிறார் த்ரிஷா. சிலர் வயது ஆக ஆக அழகாகிக்கொண்டே போவார்கள். அந்த பட்டியலில் த்ரிஷா முதன்மையானவராக இருக்கிறார்.

கிட்டத்தட்ட 23 வருடங்களாக சினிமாவில் கதாநாயகியாக ஜொலித்து வரும் த்ரிஷா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் டாப் நடிகையாக இன்றும் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் கூட அவர் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் குந்தவையாக மிகவும் ஜொலித்தார்.  இந்த நிலையில் பிரபல நடிகையான கிரீத்தி ஷெட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் த்ரிஷாவின் வயதை குறித்து ஒரு கருத்தை கூறியுள்ளார்.

Trisha

கிரீத்தி ஷெட்டி தெலுங்கு சினிமாவின் பிசியான நடிகையாக தற்போது திகழ்ந்து வருகிறார். 19 வயதே ஆன கிரீத்தி ஷெட்டி இளைஞர்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்து வருகிறார். இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “கஸ்டடி” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் தமிழிலும் வெளியானது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கிரீத்தி ஷெட்டியிடம், நிருபர் “உங்களுக்கு பிடித்த நடிகை யார்?” என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த கிரீத்தி ஷெட்டி, “எனக்கு நிறைய நடிகைகளை பிடிக்கும். ஆனால் இப்போது த்ரிஷா மேடம் எனக்கும் மிகவும் பிடித்த நடிகையாக இருக்கிறார். அவர் மிகவும் பொலிவுடன் இருக்கிறார். அவரை பார்ப்பதற்கு என்னை விட வயது இளையவராக தெரிகிறார்” என கூறியிருக்கிறார்.

Krithi Shetty

கிரீத்தி ஷெட்டி, பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த “வணங்கான்” திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அத்திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகிய நிலையில் தற்போது அருண் விஜய் இத்திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இதில் கிரீத்தி ஷெட்டி நடிக்கிறாரா என்பது குறித்து தெரியவில்லை.

 

Arun Prasad
Published by
Arun Prasad