×

காளிதாஸை வைத்து இயக்கும் கிருத்திகா உதயநிதி... என்ன படம் தெரியுமா?

ஓடிடியில் வெளியிட்ட இந்த நிறுவனம் தற்போது காளிதாஸ் ஜெயராம் - கிருத்திகா உதயநிதி கூட்டணியிலான இந்த படத்தை தயாரிக்கிறது.
 
Film-companion-Kalidas-Lead-Image-2-min-1280x720

வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. இயக்குநராக அறியப்படும் கிருத்திகா உதயநிதி, நடிகர் மற்றும் முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதியின் மனைவி ஆவார். 

இந்நிலையில் கிருத்திகா உதயநிதியின் அடுத்து இயக்கவிருக்கும் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, காளிதாஸ் ஜெயராம் நடிக்கு புதிய படத்தை இயக்கவுள்ளார் கிருத்திகா உதயநிதி. 

அண்மையில் தான் நெட்பிளிக்ஸில் வெளியான பாவக்கதைகள் ஆந்தாலஜி படத்தின் ஒரு பகுதியை இயக்குநர் சுதா கொங்காரா இயக்கியிருந்தார். தங்கம் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவான அந்த கதையில் மிகவும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்ததற்காக காளிதாஸ் ஜெயராம் பாராட்டப்பட்டார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியின் கருப்பன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த தன்யா ரவிச்சந்திரன் காளிதாஸூடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்துக்கு ரிச்சர்டு எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தை Rise East Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக போதை ஏறி புத்தி மாறி என்கிற திரைப்படத்தை தயாரித்து பின்னர் ஓடிடியில் வெளியிட்ட இந்த நிறுவனம் தற்போது காளிதாஸ் ஜெயராம் - கிருத்திகா உதயநிதி கூட்டணியிலான இந்த படத்தை தயாரிக்கிறது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News