Gen Z தலைமுறைதான் டார்கெட்!.. படையப்பா 2 வரும்!.. கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!...
1999ம் வருடம் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் படையப்பா. இந்த படத்தை ரஜினியே தயாரித்து நடித்திருந்தார். இந்த படம் ரஜினியின் சினிமா கெரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. இந்த படம் வசூலை வாரி குவித்தது. இந்த படத்தில் இடம்பெற்ற ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் தற்போது வரை பேசப்பட்டு வருகிறது.
பல இளம் நடிகைகளும் நீலாம்பரி போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாக கூறி வருகிறார்கள். படையப்பா படத்தில் ரஜினியின் அப்பாவாக நடிகர் திலகம் சிவாஜியும், அம்மாவாக லட்சுமியும் நடித்திருந்தனர். மேலும், ரஜினியின் மனைவியாக சௌந்தர்யா நடித்திருந்தார். தற்போது ஜெயிலர் 2 படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ள படையப்பா 2 வருமா என சமீபத்தில் பேட்டி ஒன்றில் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்கப்பட்டது..
அதற்கு பதில் கூறிய கே.எஸ்.ரவிக்குமார் ‘நாங்கள் படையப்பா 2 பற்றி பேசினோம்.. நீலாம்பரி இறந்து விட்டதால் அவர் மறு ஜென்மம் எடுத்து வரும் ஒரு ஹாரர் கதையை உருவாக்கினோம்.. இந்த கதை ரஜினி சாருக்கும் பிடித்திருந்தது.. அந்த சமயத்தில் படையப்பா ரீ-ரீலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது..
ஜென்சி தலைமுறையினரும் படத்தை ரசிப்பதை கவனித்த ரஜினி சார் ‘நாம் எழுதிய திரைக்கதை தற்போதைய சூழலுக்கு பொருந்தாது.. இன்றைய தலைவருக்கு ஏற்றவாறு இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும்’ எனவும் கூறினார். தற்போது அவர் வேறு படங்களில் பிஸியாக இருக்கிறார்.. இறைவன் அருளால் எதிர்காலத்தில் படையப்பா இரண்டாம் பாகம் உருவாகும்’ என அவர் கூறினார்.
