×

இதுக்கா இம்புட்டு பில்டப்பு... ஓவரா விளம்பரம் தேடுவீங்க... கடுப்பான நெட்டிசன்கள்
 

கே எஸ் ரவிக்குமார் தனது முக நூல் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்ட சில வீடியோக்களும் நெட்டிசன்களின் கடுப்புக்கு ஆளாகி இருக்கிறார்.
 
இதுக்கா இம்புட்டு பில்டப்பு... ஓவரா விளம்பரம் தேடுவீங்க... கடுப்பான நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் கே எஸ் ரவிக்குமார். எக்கசக்க ஹிட் படங்களை கொடுத்தவர் தற்போது கூகுள் குட்டப்பன் படத்தை தயாரித்து வருகிறார். சமீபத்தில் எனக்கு ஒரு பிரச்சனை என தனது முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் நான் கட்டிய வீட்டிற்கு பிரச்சனை எனக் கூறி இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் நாங்க இருக்கோம் சார் என ஆறுதல் கூறினார். ஆனால் சிலரோ இல்லையே இதுல ஏதோ வில்லங்கம் இருக்கும் என சந்தேகமடைந்தார்கள். அதிலும் இன்னோரு வீடியோவில் வருகிறேன் என அவர் சொன்னதே பலருக்கு சந்தேகத்தை கிளப்ப, ஒரு பக்கம் அவருக்கு ஆதரவும் கிளம்பியது. 

இதை தொடர்ந்து, நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், என் வீட்டின் மதில் சுவரை என்னை கேக்காம கட்சிக்காரங்க ஆக்கிரமிப்பு செய்தனர். `என் சுவர் என் உரிமை' என நான் கேட்டேன். இது பிரச்சனையாக மாறியது. அதை எப்படி தீர்த்தேன் எனக் காண்பிக்கிறேன் எனக் கூறி வீடியோவில் சஸ்பென்ஸ் வைத்தார். தேர்தல் சமயத்தில் இப்படி ஒரு வீடியோவை வெளியாக பலரும் ரவிக்குமாருக்கு ஆதரவு தெரிவித்து கட்சிக்காரர்களை திட்டி தீர்த்தார்கள். 

இந்நிலையில், அந்த சஸ்பென்ஸ் என்னவென்பதை இன்று உடைத்திருக்கிறார். அதாவது, அவர் நடித்து வெளியாக இருக்கும் மதில் படத்தின் வெளியீட்டு அறிவிப்பு தான் அது. மித்ரன் ஜவஹர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். சொந்த வீடு கட்டி அதில் ஏற்படும் அபகரிப்பு பிரச்சனையை இந்த படம் பேசுகிறது. ஏப்ரல் 14ந் தேதி இப்படம் நேரடியாக ஜி5ல் வெளியாக இருக்கிறது. இதை தான் இவர் சுற்றி வளைத்திருக்கிறார் என நெட்டிசன்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 

From around the web

Trending Videos

Tamilnadu News