Categories: Cinema News latest news

ரஜினி பார்த்து பயந்த நடிகர்களை தெரியுமா.?! இவரெல்லாம் இந்த லிஸ்ட்ல இருக்காரா..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இவரை பற்றிய முன்னுரை எதுவும் நமக்கு தேவையேயில்லை. அவரது பெயரே உலகம் முழுக்க பிரபலமாக இருக்கிறது. சினிமாவுக்கு வந்த நாற்பது வருடங்களில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக, தான்  நம்பர் 1 என்பதை படத்துக்கு படம் நிரூபித்து வந்துள்ளார் ரஜினிகாந்த்.

அப்படிப்பட்ட ரஜினிகாந்த் ஒரு சில நடிகர்களை பார்த்து, அவர்களுக்கு பெருகும் மக்கள் செல்வாக்கை பார்த்து பயந்தும் உள்ளாராம். இதனை ரஜினியை வைத்து படையப்பா, முத்து என மெகா ஹிட் படங்களை கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார் அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

அவர் குறிப்பிட்டத்தில், ரஜினிகாந்த் ஆரம்பத்தில் நடிகர் ராமராஜனின் வளர்ச்சியை பார்த்தும், அவருக்கு மக்கள் கொடுக்கும் அன்பை பார்த்தும் ரஜினி பயந்துள்ளாராம். அதேபோல, ராஜ்கிரணுக்கு கிராமத்து பகுதிகளில் கிடைக்கும் ஆதரவை பார்த்து பயந்து உள்ளாராம்.

இதையும் படியுங்களேன் – படுக்கை அறை காட்சி எத்தனை முறை செய்தீர்கள்.?! மளவிகா மோகனனின் பதிலடியை கவனித்தீர்களா.?

இதையெல்லாம் கே.எஸ்.ரவிக்குமாரிடம் ரஜினிகாந்த் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறாராம். மக்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது பார்த்தீர்களா என்று வியந்து பேசியுள்ளாராம்.

ஆனால், அந்த நடிகர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட ஏரியாக்களில், அதாவது கிராமத்து படங்களில் பின்னிப் பெடல் எடுக்க கூடியவர்கள் தான். ஆனால், ரஜினிகாந்த் அனைத்து ஏரியாக்களிலும் புகுந்து விளையாடி, தனது ஸ்டைல் மற்றும் நடிப்பின் மூலம் தற்போதும் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Manikandan
Published by
Manikandan